TNPL 2025: துஷார் ரஹேஜா அதிரடி அரைசதம்… திண்டுக்கல்லை வீழ்த்தி திருப்பூர் அபார வெற்றி

Date:

தமிழ்நாடு பிரீமியர் லீக் 2025 சீசனின் 4 ஆவது போட்டி கோவையில் நடைபெற்று வருகிறது. இதில் திண்டுக்கல் டிராகன்ஸ் – திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதில் டாஸ் வென்ற திருப்பூர் அணி பந்து வீச்சு தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய திண்டுக்கல் அணி திருப்பூர் அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இறுதியாக 16 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 100 ரன்களுக்கு திண்டுக்கல் அணி ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக சிவம் சிங் 30 ரன்கள் அடித்தார்.

திருப்பூர் அணி சார்பில் இசக்கிமுத்து 4 விக்கெட்டுகளும், மதிவண்ணன் 3 விக்கெட்டுகளும் சாய் கிஷோர் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 101 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய திருப்பூர் அணி 11.5 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 94 ரன்கள் அடித்து எளிதாக வெற்றி பெற்றது. அதிகபட்சமாக துஷார் ரஹேஜா 65 ரன்கள் அடித்தார். திண்டுக்கல் அணி சார்பில் கணேசன் பெரியசாமி 1 விக்கெட் வீழ்த்தினார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....