இஸ்ரேல் தாக்குதல் – ஈரான் ராணுவ அதிகாரி உயிரிழப்பு

Date:

மத்திய கிழக்கில் கடந்த சில ஆண்டுகளாக இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போர் தொடர்ந்து வருகிறது. இந்த சூழலில், ஈரானின் தெஹ்ரானில் ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தலைமையகத்தில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி உள்ளது.

அந்நாட்டு அரசு தொலைக்காட்சி, குண்டுவெடிப்பை உறுதி செய்துள்ளது. ஈரானின் தெஹ்ரானில் மக்கள் குண்டுவெடிப்பு சத்தத்தைக் கேட்டு அதிர்ச்சியில் மூழ்கி உள்ளனர்

இந்த தாக்குதலில் ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர ராணுவ அதிகாரி ஹொசைன் சலாமி உயிரிழந்திருப்பதாக முக்கிய தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் பல ராணுவ அதிகாரிகள் உயிரிழந்திருக்கலாம் என உள்ளூர் ஊடகம் கூறி இருக்கிறது.

இந்த சூழலில் ஈரான் பதில் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால் இஸ்ரேலில் அவசர நிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து ,ஈரன் மற்றும் இஸ்ரேல் வாழ் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தி இருக்கிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....