இஸ்ரேலுக்கு கடுமையான தண்டனை: ஈரான் அதிபர் எச்சரிக்கை!

Date:

ஈரானை தாக்கிய குற்றத்திற்காக கடுமையான தண்டனையை இஸ்ரேல் எதிர்பார்க்க வேண்டும் என ஈரானின் உயரிய தலைவர் அயதுல்லா கமெனி தெரிவித்துள்ளார். இஸ்ரேலுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் அதிபரும் கூறியுள்ளார்.

ஈரான் தலைநகர் டெஹ்ரான் மற்றும் அணுசக்தி கட்டமைப்புகள் மீதும், ஷிராஜ் மற்றும் தப்ரிஜ் நகரங்கள் மீதும் இஸ்ரேல் இன்று தாக்குதல் நடத்தியது. இதனால், அங்கு பதற்றம் நிலவுகிறது. இந்த தாக்குதலில் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர ராணுவ அதிகாரி ஹூசைன் சலாமி, ஈரான் ஆயுதப்படை தலைவரான ஜெனரல் முகமது பகேரி ஆகியோர் உயிரிழந்தவர்களில் முக்கியமானவர்கள். இதனை ஈரானிய ஊடகங்கள் உறுதி செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏவுகணை திட்ட தலைவராக செயல்பட்ட அலி ஹஜிஜதேஹாவை கொன்றுவிட்டதாக இஸ்ரேல் கூறியுள்ளது. இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஈரானும் 100 டுரோன்களை ஏவி பதிலடிகொடுத்துள்ளது.

ஈரான் மீது தாக்குதல் நடத்தி இஸ்ரேல் பெரிய குற்றம் செய்துள்ளது. இதற்காக அந்நாடு கடுமையான தண்டனையை எதிர்பார்க்க வேண்டும் எனக்கூறியுள்ளார்.

ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் கூறுகையில், தாக்குதலுக்கு பயந்து அமைதியாக இருக்க மாட்டோம். தனது முட்டாள்தனமான செயலுக்கு வருத்தப்படும் வகையில் இஸ்ரேலுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும். நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் அரசுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....