இஸ்ரேலுக்கு தொழிலுக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக நிறுத்தம்

Date:

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திர தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக இன்று (16) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திர மேலும் சுட்டிக்காட்டினார்.

மேலும் கருத்து தெரிவித்த வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திர,

“வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக இஸ்ரேலுக்கு பயணம் செய்வது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அடுத்த சில நாட்களில் நாங்கள் ஒரு முடிவை எடுக்க முடியும். குறிப்பாக இஸ்ரேல் மற்றும் ஈரானில் உள்ள எங்கள் மக்களுக்கு தூதரகத்துடன் தொடர்பைப் பேணுமாறு நாங்கள் கூற விரும்புகிறோம். தேவையான தொலைபேசி இலக்கங்களை நாங்கள் வழங்கியுள்ளோம். ஏதேனும் சிக்கல் நிறைந்த சூழ்நிலை ஏற்பட்டால், எங்களுடன் தொடர்பை ஏற்படுத்துவதற்கு எந்தத் தடையும் இல்லை. எங்கள் குடிமக்களின் பாதுகாப்பே எங்கள் முன்னுரிமை.” என்றார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....