அமெரிக்கா சிரியா மீதான இஸ்ரேலிய தாக்குதல் முடிவுக்கு வரும்

Date:

சிரியா மீது இஸ்ரேலியப் படையினர் நடத்தும் தாக்குதல்கள் முடிவுக்குக் கொண்டு வரப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.

அமெரிக்க இராஜாங்க செயலாளர் மார்கோ ரூபியோ இதனை அறிவித்துள்ளார்.

டமாஸ்கஸில் உள்ள சிரிய பாதுகாப்பு அமைச்சையும், தெற்கு சிரியாவில் உள்ள அரச படைகள் மீதும் இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

தமது படைகள் ‘ட்ரூஸ் இன சகோதரர்களைக் காப்பாற்றவே’, இந்த தாக்குதல்களை நடத்துவதாக இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த தாக்குதல்களைத் துரோக ஆக்கிரமிப்பு என்று சிரிய வெளியுறவு அமைச்சு குற்றம் சாட்டியது.

அதேநேரம், தற்போதைய நெருக்கடியான நிலையை அமைதியான முறையில் தீர்ப்பதற்கு அமெரிக்காவும் அரேபிய நாடுகளும் மேற்கொள்ளும் முயற்சியை வரவேற்பதாக சிரிய வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

இதற்கிடையில் சிரியாவில் ட்ரூஸ் போராளிகளுக்கும் பெடோயின் பழங்குடியினருக்கும் இடையிலான மோதல்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்தது முதல் இதுவரை 300க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....