தாய்லாந்து பெண்ணொருவர் புத்த துறவிகளுடன் உடலுறவு கொள்வதை காணொளி எடுத்து, பின்னர் மில்லியன் கணக்கான பவுண்டுகள் கேட்டு மிரட்டியதாகக் தெரிவிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.
சிகா கோல்ஃப் (Sika Golf) என்ற புனைப்பெயரால் அழைக்கப்படும் 35 வயதான விலாவன் எம்சாவத், 13 துறவிகளுடன் ரகசிய உறவுகளில் ஈடுபட்டதாகவும், பணமோசடி செய்ததாகவும், திருடப்பட்ட பொருட்களைப் பெற்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டார்.
மூத்த மதப் பிரமுகர்களுடனான சந்திப்புகளின் வீடியோ காட்சிகள் மற்றும் படங்களைப் பயன்படுத்தி எம்சாவத் கிட்டத்தட்ட 9 மில்லியன் பவுண்டுகளை குவித்ததாகக் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பெண்ணுக்குச் சொந்தமான ஐந்து மொபைல் சாதனங்களில், பல துறவிகளுடன் அவர் பாலியல் செயல்களில் ஈடுபட்ட காணொளி காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் காணப்பட்டதாகவும், அவர்களில் சிலர் தங்களுடைய பாரம்பரிய செம்மஞ்சள் நிற உடையினை அணிந்திருந்தனர் என்று மத்திய புலனாய்வுப் பணியகம் (CIB) அந்நாட்டு ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




