இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் ‘வேட்டுவம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வருகிறது.
இந்த திரைப்படத்தின் முக்கியமான சண்டைக் காட்சி ஒன்றின் போது சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் உயிரிழந்தார்.
இவரது இறப்பு திரையுலகை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியது.
இந்நிலையில், இவர் உயிரிழந்ததையடுத்து பிரபல இந்தி நடிகர் அக்ஷய் குமார் 650 சண்டை பயிற்சியாளர்களுக்கு காப்புறுதி திட்டத்தை செய்து கொடுத்துள்ளார்.
இந்த திட்டத்தின் மூலம், சண்டை பயிற்சியாளர்களுக்கு விபத்துக்கள் நேரிடும் பட்சத்தில் 5.5 லட்சம் ரூபாய் வரை சிகிச்சைக்காக இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும் என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.




