இன்றைய ராசிபலன் – 21 ஜூலை 2025

Date:

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மன உறுதியான நாளாக இருக்கும். எடுத்த முடிவிலிருந்து கொஞ்சம் கூட இப்படியும் அப்படியும் தடுமாறவே மாட்டீர்கள். உங்களுடைய பொறுப்புகளை நன்றாக உணர்ந்து செயல்படுவீர்கள். கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள். இந்த நாள் இனிய நாள்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று மனநிறைவு இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றத்தை அடைவீர்கள். பொருளாதார நிதி நிலைமை சீராக இருக்கும். செலவுக்கு ஏற்ப கையில் பணம் தங்கும். சில பேருக்கு சொத்து சுகம் வாங்க வாய்ப்புகள் இருக்கிறது.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று புது விஷயங்களை கற்றுக் கொள்வதில் அதிகமாக ஆர்வம் இதுக்கும். உங்களுடைய திறமைகளை வளர்த்துக் கொள்வீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல பெயர் கிடைக்கும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். நிதி நிலைமை சீர்படும்.

கடகம்

கடக ராசிக்காரர்கள் இன்று நிறைய நல்ல விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். புது விஷயங்களை கற்றுக் கொள்வதில் உங்களுக்கு ஆர்வம் அதிகரிக்கும். மேலிடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். வியாபாரத்தை பொருத்தவரை நிதானத்தோடு புது முடிவுகளை எடுக்க வேண்டும். அவசரப்படக்கூடாது.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற மன பயம் இருக்கும். எந்த பிரச்சினைக்கு என்ன முடிவு எடுப்பது என்று சில பேருக்கு தெரியாது. சின்ன தடுமாற்றத்தோடு இந்த நாள் நகர்ந்து செல்லும். கவலைப்படாதீங்க, பெரியவர்களின் பேச்சைக் கேளுங்கள். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். நல்லது நடக்கும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் இன்று சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். தடையாக இருந்த பிரச்சனைகளை எல்லாம் தவிடு பொடி ஆக்குவீர்கள். இந்த வாரம் துவக்கமே உங்களுக்கு அமோகமாக இருக்கப் போகிறது. ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். நண்பர்களும் உறவுகளும் உங்களுக்கு சப்போர்ட்டா இருப்பாங்க.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பிறக்கும். சுப செலவுகள் ஏற்படும். விருந்தாளிகளின் வருகையால் வீட்டில் கலகலப்பு உண்டாகும். வேலையும் வியாபாரத்திலும் கவனத்தை சிதறடிக்க கூடாது. பொறுப்புகளில் இருந்து பின்வாங்க கூடாது. கவனம் தேவை.

விருச்சிகம்

விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும். சென்ற இடமெல்லாம் மதிப்பும் மரியாதையும் உயரும். பண வரவு சீராக இருக்கும். உங்களுடைய கடன் சுமை குறையும். ஆரோக்கியத்தில் இருந்து வந்து பிரச்சனைகள் நீங்கும். பிள்ளைகளுடைய எதிர்கால சேமிப்பு உண்டாக முயற்சிகளை இன்று மேற்கொள்ளலாம்.

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் இன்று கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். வேலையிலும் வியாபாரத்தையும் நிதானமாக செயல்பட வேண்டும். மேல் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளக்கூடாது. இருக்கும் வேலையை தக்க வைத்துக் கொள்வது தான் புத்திசாலித்தனம். வியாபாரத்தை பொருத்தவரை கடனுக்கு வியாபாரம் செய்யாதீங்க.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்று இறக்க குணம் இருக்கும். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். ஆன்மீகத்தில் மனது ஈடுபடும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் காணப்படும். எதிரிகள் கூட நண்பர்களாக மாறுவார்கள். சில பேருக்கு பிரமோஷன், இட மாற்றம் இதுபோல உங்கள் மனதிற்கு விருப்பப்பட்ட நல்லது நடக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று மனது ஆன்மீகத்தில் ஈடுபடும். குடும்பத்தோடு கோவிலுக்கு செல்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. வேலையில் சின்ன சின்ன டென்ஷன் வரலாம். சின்ன சின்ன எதிரிகள் உண்டாக வாய்ப்புகள் உள்ளது. பொருளாதார ரீதியாக சின்ன சரிவு உண்டாகும். வியாபாரத்தில் சின்ன நஷ்டம் வரலாம். கவனத்தோடு செயல்படுங்கள்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்று உடல் சோர்வு இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் நீங்கள் இன்று கவனம் செலுத்த வேண்டும். உணவு பழக்க வழக்கத்தில் கட்டுப்பாடை வைத்துக் கொள்ளுங்கள். மற்றபடி வேலையும் வியாபாரத்தையும் பெரிதாக பிரச்சனை இருக்காது. கணவன் மனைவி வாக்குவாதம் செய்யக்கூடாது. ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....