எஹலியகொட பகுதியில் வாகன விபத்து – ஒருவர் பலி

Date:

எஹலியகொட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிரிஎல்ல வீதியின் தங்தெனிய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

எஹலியகொட பிரதேசத்தில் இருந்து கிரிஎல்ல நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று எதிர்திசையில் வந்த முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் பலத்த காயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி, மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும் பின் இருக்கையில் பணித்தவர் காயமடைந்த நிலையில் எஹலியகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதன்போது முச்சக்கரவண்டி சாரதி சிகிச்சைப் பலனின்று உயிரிழந்துள்ளதோடு, மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் மற்றைய நபரும் மேலதிக சிகிச்சைக்காக இரத்தினபுரி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

எஹலியகொட, பஹலகம பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடைய ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

சடலம் எஹலியகொட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, மேலதிக விசாரணைகளை எஹலியகொட பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....