மகளிர் ஆசிய கோப்பை ஹாக்கி இறுதிப்போட்டி: இந்தியா – சீனா நாளை மோதல்

Date:

11-வது மகளிர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதன் லீக் சுற்று முடிவில் சூப்பர்4 சீனா, தென் கொரியா, இந்தியா, ஜப்பான் அணிகள் சூப்பர்4 சுற்றுக்குள் தகுதி பெற்றன.

சூப்பர்4 சுற்றில் இவை தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

இந்நிலையில் சூப்பர்4 சுற்றின் கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் இன்று நடக்கின்றன. இதில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இந்திய அணி, நடப்பு சாம்பியன் ஜப்பானை எதிர்கொண்டது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இந்தியா தரப்பில் பியூட்டி டங்டங்கும், ஜப்பான் தரப்பில் ஷிஹோ கோபயாகவாவும் கோல் அடித்தனர்.

இதனையடுத்து நடந்த சூப்பர்4 சுற்றின் 2-வது ஆட்டத்தில் சீனா – தென் கொரியா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

இதன்மூலம் நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் முதல் 2 இடங்களை பிடித்த சீனா மற்றும் இந்தியா மோதவுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....