ஐ.பி.எல் 2026 ஆம் ஆண்டுக்கான எதிர்பார்ப்பு எப்போதே ஆரம்பமாகியுள்ளது என்றே கூறவேண்டும்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து ரவீந்திர ஜடேஜாவை டிரேடு செய்து வாங்கிய ராஜஸ்தான் அணி தற்போது பதிவிட்டுள்ள எக்ஸ் பதிவில் ஐபிஎல் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
அதாவது சூப்பர் ஸ்டார் ரஜனியின் பட வசமான குறி வச்சா இரை விழணும் என தனது மூக்கு கண்ணாடியை காட்டி பேசும் படத்தினை இட்டு சரியாக 11:11 மணிக்கு பதிவிட்டி பதிவில், டிராவிஸ் ஹெட்டின் சிரிப்பினை மட்டும் பதிவிட்டுள்ளனர்.
குறித்த பதிவின் மூலம் சூச்சகமாக ராஜஸ்தான் அணியில் டிராவிஸ் ஹெட் இணைந்துள்ளார் என தெரிவிக்கும் விதமாக அமைந்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.




