இருபது அணிகள் இடையிலான பத்தாவது ஐ.சி.சி. இருபதுக்கு20 உலக கிண்ண கிரிக்கெட் தொடர் பெப்ரவரி 7 ஆம் திகதி முதல் மார்ச் 8 ஆம் திகதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது.
இதில் பங்கேற்கும் 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் நடப்பு சாம்பியனான இந்திய அணி ‘ஏ’ பிரிவில் பாகிஸ்தான், நமீபியா, நெதர்லாந்து மற்றும் அமெரிக்காவுடன் இடம் பெற்றுள்ளது.
இந்நிலையில் இந்த தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட ஆப்கானிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டது. ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டனாக ரஷித் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தான் அணி:-
ரஷீத் கான் (கேப்டன்), இப்ராஹிம் சத்ரான், குர்பாஸ், முகமது இஷாக், அடல், தர்வீஷ் ரசூலி, ஷாஹிதுல்லா கமால், ஒமர்சாய், குல்பாடின் நைப், முகமது நபி, நூர் அகமது, முஜீப் ரஹ்மான், நவீன் உல் ஹக், ஃபரூக்கி, அப்துல்லா அஹ்மத்சாய்.




