மௌன மொழி திரைப்படத்திற்கு பிறகு சனாதனனின் இயக்ககத்தில் மிக விரைவில் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்படவுள்ள அன்பதிகாரம் முழுநீளத் திரைப்படத்தின் முதற் பார்வை இன்று வெளியிடப்பட்டுள்ளது.
சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற ‘மௌன மொழி’ திரைப்படத்தைத் தொடர்ந்து, சனாதனன் இயக்கும் இந்த புதிய திரைப்படம் ஒரு முழுநீள திரைப்படமாக உருவாகவுள்ளது.
இன்று வெளியாகியுள்ள போஸ்டர், காதல் மற்றும் த்ரில்லர் கலந்த ஒரு வித்தியாசமான கதைக் கருவை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது.
தற்போது இப்படத்திற்கான கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களைத் தேர்ந்தெடுக்கும் பணிகள் (Casting Call) தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் நிறைவடைந்தவுடன், மிக விரைவில் படப்பிடிப்புத் தளத்திற்குச் செல்ல படக்குழு திட்டமிட்டுள்ளது.
படத்தின் மற்றுமொரு சிறப்பம்சமாக, இலங்கை மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த பல திறமையான கலைஞர்கள் இதில் இணையவுள்ளதாகத் தெரிகிறது. படத்தின் கூடுதல் தகவல்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விபரங்கள் அடுத்தடுத்து வெளியாகும் என இயக்குநர் சனாதனன் தெரிவித்துள்ளார்.
அன்பதிகாரம் படத்தின் முதற் பார்வை
Date:




