மீசைய முறுக்கு 2 படத்தின் அதிரடி அறிவிப்பு

Date:

இசையமைப்பாளராகத் தன்னை அறிமுகப்படுத்திய ஹிப் ஹாப் தமிழா ஆதி, தனது முதல் படமான மீசைய முறுக்கு மூலம் கதாநாயகன், இயக்குநர் என இரு வேடங்களிலும் இரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றார். திரைப்படம் கடந்த 2017 ஆம் ஆண்டு சுந்தர் சி தயாரிப்பில் வெளியானது. இப்படத்தில் ஆத்மிகா, விவேக், ஆர்ஜே விக்னேஷ்காந்த் மற்றும் விஜயலட்சுமி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர்.

கல்லூரி மாணவனின் கனவு, காதல், வாழ்க்கைப் போராட்டங்களை எளிமையாக சொல்லிய அந்த படம் இளைஞர்களிடம் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. ஒரு உண்மை கதையினை பின்புலமாக கொண்டு மீசைய முறுக்கு முதலாம் பாகம் எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகமாக மீசைய முறுக்கு 2 படத்தை ஹிப்ஹாப் ஆதி இயக்கவுள்ளார். இதுவும் ஒரு உண்மை கதையை பின்புலமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் மலேசியாவில் தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த படத்தில் தனது தம்பியான ஹர்ஷத்கான் நடித்துள்ளதாக அறிவித்துள்ளார். vj Siddhu vlogs மூலம் பிரபலமாகியவர் ஹர்ஷத்கான் என்பது குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....