டி20 உலகக் கோப்பையில் விளையாட கெடு: மாற்று அணியும் ரெடி- வங்கதேசத்துக்கு செக் வைத்த ஐசிசி

Date:

ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற இருக்கிறது. “சி” பிரிவில் வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ், இத்தாலி, இங்கிலாந்து, நேபாளம் அணிகள் இடம் பிடித்துள்ளன. இந்த பிரிவில் உள்ள அணிகள் கொல்கத்தா மற்றும் மும்பையில் விளையாடுகின்றன.

குரூப் “பி”-யில் இலங்கை, ஆஸ்திரேலியா, ஓமன், ஜிம்பாப்வே, அயர்லாந்து அணிகள் இடம் பிடித்துள்ளன. இந்த அணிகள் மோதும் போட்டிகள் கொழும்பு மற்றும் பல்லேகலேயில் நடைபெற இருக்கின்றன.

வங்கதேசத்தில் மைனாரிட்டி இந்துக்கள் தாக்கப்படுவதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த காரணத்தை முன்னிட்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பிடித்திருந்த முஸ்தபிஜுர் ரகுமான் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதனால் பாதுகாப்பு காரணத்தை முன்வைத்து வங்கதேச அணி இந்தியா வந்து விளையாட ஆட்சேபனை தெரிவித்து வருகிறது. ஆனால், இந்தியாவில் வந்துதான் விளையாட வேண்டும் என்று ஐசிசி வலியுறுத்தி வருகிறது.

மேலும் ஐசிசி குழுவிடம் எங்களை சி பிரிவில் இருந்து பி பிரிவுக்கு மாற்றி விடுங்கள். “பி” பிரிவில் விளையாடும் போட்டிகள் அனைத்தும் கொழும்பு மற்றம் பல்லேகலேயில் நடைபெற இருக்கிறது. இதனால் நாங்கள் இந்தியாவில் விளையாட வேண்டியிருக்காது என வங்கேச கிரிக்கெட் போர்டு கேட்டுக்கொண்டுள்ளது.

அதனை நிராகரித்த ஐசிசி வங்கதேச அணிக்கு காலகெடு விடுவித்துள்ளது. அதன்படி வருகிற 21-ந் தேதிக்குள் வங்கதேச அணி இந்தியாவில் விளையாடுகிறதா? இல்லையா என்பது குறித்து அறிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்படி இந்தியா செல்ல மறுத்தால், வங்கதேசத்திற்கு பதிலாக ஸ்காட்லாந்து அணி (தற்போதைய ரேங்கிங் அடிப்படையில்) அந்த குரூப்பில் விளையாடும் எனஐசிசி திட்டமிட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....