ஜனநாயகன் படத்தின் ஓ.டி.டி. உரிமைக்கு போட்டி

Date:

எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படம், தணிக்கை வாரிய சான்றிதழ் கிடைக்காத நிலையில் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போய்க் கொண்டிருக்கிறது. சமீபத்தில் படத்தின் ஓ.டி.டி. உரிமையும் கைவிடப்பட்டது. முழு படமும் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தியது.

இதற்கிடையில் விஜய் தேர்தல் களத்தில் குதித்து முதலமைச்சரும் ஆகிவிட்டார். இதையொட்டி, ‘ஜனநாயகன்’ படத்தை ரிலீஸ் செய்யும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. சமீபத்தில்கூட படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் கே.நாராயணா, குறித்த படம் விரைவில் திரைக்கு வரும் என்று உறுதிபட தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில் விஜயின் குறித்த படத்தின் ஓ.டி.டி. உரிமைக்கு போட்டாபோட்டி நடக்கிறதாம். பல்வேறு முன்னணி நிறுவனங்கள் விஜயின் கடைசி படத்தின் ஓ.டி.டி. உரிமையை வாங்க கடும் போட்டியிட்டு வருகிறார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. இது துவண்டு போயிருந்த படக்குழுவினருக்கு உற்சாகத்தை கொடுத்திருக்கிறது.

மேலும் படத்தில் விஜய்யின் பெயருக்கு முன்பாக ‘முதலமைச்சர்’ என்பதை இணைக்கும் வகையில் ஏற்பாடுகள் நடக்கிறதாம்.

CSK வுக்கு மேலும் மேலும் மரண அடி..


Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....