ஆகஸ்டில் வெளியாகும் ‘கிளாடியேட்டர்ஸ்’

Date:

அஜித்குமார் ரேஸிங் தொடர்பாக ‘கிளாடியேட்டர்ஸ்’ என்ற தலைப்பில் புதிய ஆவணப் படம் உருவாகி வருகிறது. இது வருகின்ற ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தமிழ் நாட்டின் முன்னணி நடிகர்களுள் ஒருவரானவரும், ரசிகர்களால் தல என்றும் அல்டிமேட் ஸ்டார் என்ற பெயருக்கும் சொந்தமானவர் நடிகர் அஜித்குமார்.

1993 ஆம் ஆண்டு அமராவதி என்ற தமிழ் திரைப்படம் மூலம் அறிமுகமானவர். தற்போது வரை 60 படங்களுக்கும் மேல் நடித்து தமிழ் திரையுலகில் சிறந்த நடிகராக வளம் வருகிறார்.

நடிப்பதில் மட்டுமில்லாமல், சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு உண்மையான தொழில்முறை கார் பந்தய வீரராக இருக்கிறார்.

இவர், ‘அஜித்குமார் ரேசிங்’ என்ற தனது சொந்த பந்தய அணியையும் தொடங்கி பல்வேறு தொடர்களில் வெற்றி பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்து வருகிறார்.

இவரின் கடைசி படமான ‘குட் பேட் அக்லி’ கடந்த 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியானது. அதன் பிறகு தனது முழு ஆர்வத்தையும கார் ரேஸில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

இதற்கிடையில், அஜித்குமார் ரேஸிங் தொடர்பாக ‘கிளாடியேட்டர்ஸ்’ என்ற தலைப்பில் புதிய ஆவணப் படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை ஏ.எல். விஜய் இயக்கத்தில், ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

‘கிளாடியேட்டர்ஸ்’ படத்தின் டீசர் அவரது பிறந்தநாளன்று வெளியாகி ரசிகர்களின் கவனைத்தை பெற்றது.

‘கிளாடியேட்டர்ஸ்’ என்கிற தலைப்பில் உருவாகிவரும் நடிகர் அஜித் குமாரின் ரேஸிங் ஆவணப் படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்ற தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆவண படத்தின் மூலம் ரேசிங் உலகில் அஜித்தின் சாதனைகளை பெரிய திரையில் பார்ப்பதற்கு ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

உங்கள் ஓட்டுநர் உரிமத்தைப் (Driving License) புதுப்பிப்பதற்கான நடைமுறைகள் மற்றும் தேவையான ஆவணங்கள்


Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....