பிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்த கொல்கத்தா

Date:

ஐ.பி.எல். 2026 டி20 கிரிக்கெட் தொடரின் 65-ஆவது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.

கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.

முதலில் பேட் செய்ய வந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு துவக்க வீரரன ரியான் ரிக்கில்டன் 6 ரன்களுக்கு அவுட் ஆக, இவருடன் களமிறங்கிய ரோகித் சர்மா 15 ரன்களில் தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார்.

நமன் திர் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆக மும்பை அணி ரன் குவிக்க முடியாமல் ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

அடுத்தடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 15 ரன்களும், திலக் வர்மா 20 ரன்களும், கேப்டன் ஹர்திக் பாண்டியா 26 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

கடைசி ஓவர்களில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கார்பின் போஷ் 18 பந்துகளில் 32 ரன்களை விளாசினார்.

இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 147 ரன்களை குவித்தது.

கொல்கத்தா சார்பில் சிறப்பாக பந்துவீசிய சௌரப் தூபே, கார்த்திக் தியாகி மற்றும் கேமரூன் கிரீன் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றிய நிலையில் சுனில் நரைன் 1 விக்கெட் வீழ்த்தினார்.

148 ரன்களை துரத்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கேப்டன் அஜிங்கியா ரஹானே 21 ரன்களும், ஃபின் ஆலென் 8 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இதைத் தொடர்ந்து களமிறங்கிய மனீஷ் பாண்டே சிறப்பாக ஆடி 33 பந்துகளில் 45 ரன்களை குவித்தார். தொடர்ந்து ரோவ்மேன் பொவெல் 30 பந்துகளில் 40 ரன்களை விளாசினார்.

போட்டி முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 18.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 148 ரன்களை குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மும்பை தரப்பில் கார்பின் போஷ் 3 விக்கெட்டுகளையும், தீபக் சாஹர், பும்ரா மற்றும் கசன்ஃபர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இன்றைய போட்டியில் வெற்றி பெற்றதை தொடர்ந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பிளேஆஃப் சுற்று வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....