3-வது ஒரு நாள் போட்டி : இந்திய அணிக்கு 353 ஓட்டங்கள் இலக்கு

Date:

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணிக்கு 353 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

இந்தியாவிற்கு வருகை தந்துள்ள அவுஸ்திரேலிய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது.

 

முதலிரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை 2-0 என கைப்பற்றிவிட்டது. மூன்றாவது போட்டி குஜராத்தின் ராஜ்கோட் மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது.

 

குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணி துடுப்பாட்ட தீர்மானித்தது.

 

அவுஸ்திரேலிய அணிக்கு வார்னர், மிட்சல் மார்ஷ் ஜோடி அபார தொடக்கம் தந்தது. இந்திய பந்துவீச்சை எளிதாக சமாளித்த இருவரும் அரை சதம் விளாசினர். இவர்களை பிரிக்க முடியாமல் பவுலர்கள்

திணறினர்.

 

ஒருவழியாக, பிரசித் கிருஷ்ணா ‘வேகத்தில்’ வார்னர் (56) ஆட்டமிழந்தார். மிட்சல் மார்ஷ் 96 ஓட்டத்தில் ஆட்டமிழந்தார். சிறப்பாக செயற்பட்ட ஸ்டீவ் ஸ்மித் அரை சதம் கடந்தார். இவர் சிராஜ் பந்துவீச்சில் 74 ஓட்டத்தில் ஆட்டமிழந்தார்.

 

தன் பங்கிற்கு லபுசேன் (72) அரை சதம் விளாசினார். கேரி (11), மேக்ஸ்வெல் (5) ஏமாற்ற அவுஸ்திரேலிய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 352 ஓட்டங்கள் எடுத்தது. கம்மின்ஸ் (19), ஸ்டார்க் (1) ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய அணியின் பும்ரா 3, குல்தீப் 2 விக்கெட் கைப்பற்றினர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஐபிஎல் 2024: 2-வது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது ராஜஸ்தான்

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ்...

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட...

நடப்பு ஐபிஎல் தொடரில் 1,125 சிக்சர்கள்: கடந்த ஆண்டு சாதனை முறியடிப்பு

ஐ.பி.எல் தொடரின் ஒவ்வொரு சீசனிலும் சிக்சர்களின் எண்ணிக்கை உயர்ந்தவாறு இருக்கிறது. தற்போது...