32 சதவீத மாணவர்களுக்கு மன அழுத்தம்

Date:

சென்னையில் தற்போது மாணவர்கள் மத்தியில் மன அழுத்தம் அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

மனநல பராமரிப்பு மற்றும் மறுவாழ்வு சேவைகளை வழங்கும் தன்னார்வ அமைப்பு ஒன்று நடத்திய ஆய்வின்படி 32 சதவீத பள்ளி-கல்லூரி மாணவர்கள் கடுமையாக மன அழுத்தத்துக்கு ஆளாகியிருப்பது தெரிய வந்தது.

30 சதவீதம் மாணவர்கள் எதிர்காலம் பற்றிய கவலைக்கு உள்ளாகியுள்ளனர். சில மாணவர்கள் தற்கொலை எண்ணம் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

மாணவர்களின் மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை கண்டறிவதற்காக 15 ஆயிரம் மாணவர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதுகுறித்து மனநல மருத்துவர்கள் கூறியதாவது:-

32 சதவீத மாணவர்கள் மன அழுத்தத்துக்கு ஆளாகி இருந்தாலும் அவர்களில் 5 சதவீதத்துக்கு குறைவானவர்கள் மட்டுமே மனநல மருத்துவ உதவியை நாடுகிறார்கள். மற்றவர்கள் மருத்துவர்களின் உதவியை புறக்கணிப்பது பெரிய ஆபத்தாக பார்க்கப்படுகிறது.

இந்த மாணவர்களுக்கு எப்படி மனநல மருத்துவர்களின் உதவியை பெற வைப்பது என்பதுதான் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.

இந்தியாவில் பாதிக்கும் மேற்பட்ட இளைஞர்கள் மனநல பிரச்சனைகளுக்கு சிகிச்சை பெறுவதில்லை. அதனால் சிலர் வன்முறையை கையில் எடுக்கிறார்கள். சிலர் போதை பொருளுக்கு அடிமையாகிறார்கள். சிலருக்கு தற்கொலை எண்ணம் அதிகரிக்கிறது.

குறிப்பாக தென் மாவட்டங்களில் உள்ள இளைஞர்கள் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். இந்தியாவில் ஏற்படும் மரணங்களில் தற்கொலை விகிதம் கடந்த 2019-ம் ஆண்டு 9.9 சதவீதமாக இருந்தது. அது 2022-ம் ஆண்டு 12.4 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இதற்கு முன்பு சாலை விபத்துக்களாலேயே அதிக மரணம் ஏற்பட்டது. தற்போது தற்கொலையால் அதிக இறப்புகள் ஏற்படுகின்றன.

மாணவர்களிடம் ஏற்படும் மன அழுத்தம், மனக்கலவையின் ஆரம்ப அறிகுறிகளை கண்டறிய ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். உதாரணமாக, ஒரு மாணவர் தூங்குவதிலும், சாப்பிடுவதிலும் பிரச்சனை இருப்பதை கண்டறிந்தாலோ, நட்பு வட்டாரங்களில் இருந்து விலகி தனியாக இருந்தாலோ பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் உடனடியாக தலையிட வேண்டும். அடுத்த கட்டமாக அந்த மாணவர்களை மனநல ஆலோசகர்களிடம் அழைத்து சென்று ஆலோசனை பெற வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பார்டர் -கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்- பேட் கம்மின்ஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர்...

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: அறிமுக வீரருடன் ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட...

விடுதலை 2 : ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

விடுதலை 2படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி...

தென்ஆப்பிரிக்கா பவுலர்களை கதறவிட்ட நிக்கோலஸ் பூரன்: முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் எளிதில் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி...