11 ஓட்டங்களில் வெற்றியை பறித்த குஜராத் ஜெயண்டஸ் அணி

ராயல் சேலஞ்சரஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் ஜெயண்டஸ் அணி 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
அதிரடி காட்டிய குஜராத் ஜெயன்ட்ஸ்
மகளிர் பிரீமியர் லீக் போட்டியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் ஜெயண்டஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.
நாணயசுழற்சியில் வென்ற குஜராத் அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்து ஆட்டத்தில் களமிறங்கியது, இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 201 ஓட்டங்கள் குவித்து அசத்தியது.
அணியில் அதிகபட்சமாக டங்கிலி 65 ஓட்டங்களையும் ஹர்லீன் தியோல் 67 ஓட்டங்களையும் குவித்து குஜராத் அணிக்கு பலம் சேர்த்தனர்.
விடாமல் துரத்திய பெங்களூரு
A tough pill to swallow. We fought well, we fought hard. So near yet so far! 💔#PlayBold #ನಮ್ಮRCB #SheIsBold #WPL2023 #GGvRCB pic.twitter.com/sXR2AfC8e2
— Royal Challengers Bangalore (@RCBTweets) March 8, 2023
201 ஓட்டங்கள் என்ற மிகப்பெரிய இலக்குடன் களமிறங்கிய ராயல் சேலஞ்சரஸ் பெங்களூரு இறுதி வரை இலக்கை அடைய போராடினர்.
சோஃபி டெவின் 66 ஓட்டங்களையும், ஹீதர் நைட் 30 ஓட்டங்களையும் குவித்து இருந்தும் பெங்களூரு அணியால் வெற்றி இலக்கான 202 ஒட்டங்களை அடைய முடியவில்லை.
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் ராயல் சேலஞ்சரஸ் பெங்களூரு அணி 6 விக்கெட்டுகளை இழந்து வெறும் 190 ஓட்டங்கள் மட்டுமே குவித்து இருந்தது.
இதனால் ராயல் சேலஞ்சரஸ் பெங்களூரு அணியை 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் ஜெயண்டஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.