சிறுநீரகத்திற்கு தீங்கு விளைவிப்பவை இவைகளா?

நம் உடலின் முக்கியமான பகுதியில் ஒன்று சிறுநீரகம். உடலில் உள்ள நீர்ம சமநிலையை சிறுநீரகங்கள் தான் பராமரித்து வருகிறது. உங்கள் சிறுநீரகத்தை பாதுகாக்க இதையெல்லாம் ஒருப்போதும் செய்யக்கூடாது.
அறிகுறிகள்
- தலைவலி
- தலைசுற்றல்
- உடல் மந்தம்
- குமட்டல்
- கழுத்து வலி
- இடுப்பு வலி
செய்யகூடாதவை
வலி நிவாரணி மாத்திரைகள் அதிகமாகப் பயன்படுத்துதல் சிறுநீரகத்துக்கு நல்லது இல்லை.
தலைவலி அல்லது மூட்டுவலியாக இருந்தாலும், மருத்துவரின் ஆலோசனையின்றி, வலிநிவாரணி மாத்திரைகளை தொடர்ந்து உட்கொண்டால் பாதிப்பு ஏற்படும்.
அதிக உப்பு உட்கொள்ளுதல் சிறுநீரகத்தின் பளுவை அதிகமாக்கும்.
உயர் இரத்த அழுத்தம் அதிகரிப்பது உங்கள் சிறுநீரகத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
அதிக சர்க்கரை சாப்பிடுவது சிறுநீரகத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது உங்கள் சிறுநீரகத்திற்கு ஆபத்தை தரும்.
போதுமான அளவு தூங்கவில்லை என்றாலும் அது சிறுநீரகத்தை பாதிக்கும்.
புகைபிடித்தல் சிறுநீரக பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். ஒரு நாளைக்கு நான்கு முறைக்க மேல் குடிப்பது பாதிப்பு தரும்.
இறைச்சியில் உள்ள புரதம் இரத்தத்தில் அதிக அளவு அமிலத்தை உருவாக்கலாம் இது சிறுநீரகங்களை சேதப்படுத்தும்.
நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது உங்கள் சிறுநீரகத்திற்கு தீங்கு விளைவிக்கும்.