மகளுடைய அறைக்குள் ஆடையின்றி நின்ற ஆண்னை கண்ட தந்தை : ஆத்திரத்தில் எடுத்த முடிவு

தன் பதின்ம வயது மகளுடைய அறைக்குள் ஆண் ஒருவர் ஆடையின்றி நிற்பதைக் கண்ட அந்த பெண்ணின் தந்தை அவரை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
தன் அறைக்குள் நிர்வாணமாக நுழைந்த ஆணைக்கண்டு சத்தமிட்ட இளம்பெண்
புளோரிடாவில் வாழும் Dayne Victor Miller (44), தன் மகள் தனது படுக்கையறையிலிருந்து சத்தமிடுவதைக் கேட்டு ஓடிவந்துள்ளார்.
அப்போது, Dayneஉடைய பதின்ம வயது மகளுடைய அறைக்குள் ஒரு ஜோடி நிற்பதையும், அதில் அந்த ஆண் நிர்வாணமாக நிற்பதையும் கண்ட Dayne, ஆத்திரத்தில் உன்னைக் கொன்றுவிடுவேன் என சத்தமிட்டுள்ளார்.
ஆத்திரமடைந்த தந்தையின் செயல்
மூடியிருந்த தன் மகளுடைய அறைக்குள் ஆண் ஒருவர் ஆடையின்றி நின்றதால் ஆத்திரமடைந்த Dayne, துப்பாக்கியை எடுத்து அந்த நபரை சுட்டுள்ளார்.
ஆனால், அதே வீட்டில் வேறொரு அறையில் தங்கியிருந்த அந்த ஜோடி, தாங்கள் அளவுக்கதிகமாக மதுபானம் குடிந்திருந்ததால் தவறுதலாக Dayne உடைய மகளுடைய அறைக்குள் நுழைந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், பொலிசாரை அழைத்த Dayne, தான் தன் மகளுடைய அறைக்குள் நுழைந்தவர்களை துப்பாக்கியால் சுட்டுவிட்டதாக பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.
பொலிசார் Dayne ஐக் கைது செய்துள்ளனர். ஆயுதம் கொண்டு தாக்கியதாக அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.