சப்ரகமுவ பல்கலையில் மோதல் – 7 பேர் படுகாயம்

Date:

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் நேற்று (11) இடம்பெற்ற கரப்பந்தாட்டப் போட்டியின் போது ஏற்பட்ட மோதலில் 7 மாணவ, மாணவிகள் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடம் மற்றும் வர்த்தக பீடம் என்பவற்றுக்கிடையில் கரப்பந்தாட்ட போட்டி நடத்தப்பட்டதன் பின்னரே இரு தரப்பினருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

போட்டியில் தமது தோல்வியை ஏற்றுக்கொள்ளாத ஒரு பிரிவினரால் இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இதில் மூன்று மாணவர்களும் நான்கு மாணவிகளும் காயடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இப்போட்டி பல்கலைக்கழக நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....