# Tags
#இலங்கை

8400 தொலைபேசிகள் திருட்டு

இந்த வருடத்தில் கடந்த இரண்டு மாதங்களில், இலங்கையில் 8,422 தொலைபேசிகள் திருடப்பட்டுள்ளன அல்லது தொலைந்து போயுள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு (TRCSL) தெரிவித்துள்ளது.

தொலைந்த தொலைபேசிகளை மீட்பதற்காக பொலிஸார் 2018 டிசம்பர் 31 ஆம் திகதி முதல் இணையத்தள முறையை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

இதன்மூலம் தமக்கு மொத்தமாக 134,451 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருந்ததாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, 2019 ஆம் ஆண்டில், 40,167 கைபேசிகளும் 2020 ஆம் ஆண்டில் 12,567 கைபேசிகளும், 2021 ஆம் ஆண்டில் 27,933 பேசிகளும் திருடப்பட்டுள்ளன அல்லது தொலைந்து போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொலைந்து போன தொலைபேசிகள் குறித்து தமக்கு கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள், உரிய பொலிஸ் நிலையங்களுக்கு அனுப்பப்படுவதாகவும் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் (பொது முறைப்பாடுகள்) மேனகா பத்திரன ஊடகங்களுக்கு தெரிவித்தார்.