பூண்டுலோயா திருவிழாவில் நகை கொள்ளை.

Date:

பூண்டுலோயா ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கும்பாபிஷேக திருவிழாவில் பக்தர்களிடம் நகைகளை கொள்ளையிட்ட 09 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் 7 பெண்கள் மற்றும் 2 ஆண்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்கள் பல்லேகலை , வவுனியா, புத்தளம், யாழ்ப்பாணம் , கிளிநொச்சி பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.

நகைகளை இழந்தவர்கள் காவல்துறையில் செய்த முறைப்பாட்டுக்கமைய, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போதே குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடம் இருந்து பூண்டுலோயா திருவிழாவில் திருடப்பட்ட 17 பவுண் நகைகளும், அதற்கு மேலதிகமாக திருடப்பட்ட 100 பவுணுக்கும் மேற்பட்ட நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களை நேற்றைய தினம் நாவலப்பிட்டி நீதிவானிடம் முன்னிலைப்படுத்திய போது, அவர்களை அடையாள அணிவகுப்புக்காக தடுத்து வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....