லியோ படத்தின் புதிய அப்டேட்!

Date:

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘லியோ’. இந்த படம் வரும் அக்டோபர் மாதம் 19 ஆம் திகதி வெளியாகிறது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்நிலையில் நேற்று தனியார் விருது வழங்கும் விழாவில் லோகேஷ் கனகராஜ் பங்கேற்றார். அப்போது ‛பிளடி ஸ்வீட்’ என்றால் என்ன என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், ‘விக்ரம்’ படத்தில் வந்த ‘ஆரம்பிக்கலாங்களா’ என்ற வார்த்தை போன்று ‘லியோ’ படத்தில் ‛பிளடி ஸ்வீட்’ என வரும். படம் வரும்போது பார்த்து என்ஜாய் பண்ணுங்க .இந்த படம் பக்கா மாஸ் ஆக்ஷன் படமாக இருக்கும். முதற்கட்டமாக காஷ்மீரில் 60 நாட்கள் படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளது. இதையடுத்து இன்னும் 60 நாட்கள் படப்பிடிப்பு நடக்கவுள்ளது. அத்துடன் மொத்த படப்பிடிப்பும் முடிவடையும். திட்டமிட்டபடி படம் வெளியாகும் என கூறினார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....