கூட்டுப்போர்ப்பயிற்சியில் ஈடுபடும் நாடுகளின் மீது தாக்குதல்

Date:

கொரிய தீபகற்ப பகுதியில் வடகொரியாவின் தொடர் ஏவுகணை சோதனைகளால் நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்து வருகிறது. இதனால் தங்களது நாட்டின் பாதுகாப்பு கருதி அமெரிக்காவுடன் இணைந்து தென்கொரியா கூட்டுப்போர்ப்பயிற்சியில் ஈடுபட்டது. இதற்கிடையே ஜப்பான் கடல் பகுதியிலும் வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியதால் இந்த கூட்டுப்போர்ப்பயிற்சியில் ஜப்பானும் இணைந்து கொண்டது.

இதனால் கடந்த வாரம் தென்கொரியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய 3 நாடுகளும் இணைந்து முத்தரப்பு போர்ப்பயிற்சியில் ஈடுபட்டன. இதனை போருக்கான தாக்குதல் நடவடிக்கை என வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் விமர்சித்து இருந்தார்.

கூட்டுப்போர்ப்பயிற்சியின்போது கொரிய தீபகற்ப பகுதியில் அணுசக்தி திறன் கொண்ட குண்டுகள் வீசும் விமானங்களை அமெரிக்கா பறக்க விட்டது.

ஆத்திரம் அடைந்த வடகொரியா இந்த கூட்டுப்போர்ப்பயிற்சியில் ஈடுபடும் நாடுகளின் மீது தாக்குதல் நடவடிக்கை எடுக்கப்படும் என பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் கொரிய தீபகற்ப பகுதியில் எப்போது வேண்டுமானாலும் போர் ஏற்படலாம் என வடகொரியாவின் அரசு ஊடகம் அச்சம் தெரிவித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....