11 தமிழக மீனவர்கள் விடுதலை..

Date:

இந்தியக் கடல் எல்லையைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கைது செய்யப்பட்ட 11 தமிழக மீனவர்களை நிபந்தனையுடன் இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாபட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினத்தில் இருந்து கடந்த மாதம் 23 ஆம் திகதி மீன்பிடிக்க இரண்டு படகுகளுடன் 12 மீனவர்கள் கடலுக்குச் சென்றுள்ளனர். அப்போது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை அவர்களைப் படகுகளுடன் கைது செய்தது.

அதனைத்தொடர்ந்து, 12 பேரையும் ஊர் காவல்துறை நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தினர் . இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கஜநீதிபலன், மீனவர்கள் 11 பேரை நிபந்தனைகளுடன் விடுதலை செய்து உத்தரவிட்டார். மேலும் ஒரு மீனவர் இரண்டாவது முறையாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளதால், அவருக்கு மட்டும் 14 மாதங்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார். மேலும் மீனவர்கள் பயன்படுத்திய ஒரு படகு அரசுடைமையாக்கப்பட்டுள்ளது. மற்றொரு படகு குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....