யாழில் இரு சிறுவர்கள் மாயம்!

Date:

திருநெல்வேலி சைவ வித்தியா விருத்திச்சங்க சைவச் சிறுவர் இல்லத்திற்கு சேதம் விளைவித்தனர் என நிர்வாகத்தினரால் பொலிஸாரிடம் பெயர் குறிப்பிட்ட இரண்டு சிறுவர்களை அன்றைய தினம் முதல் காணவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றைய தினம்  08 வரையில் குறித்த இரு சிறுவர்கள் தொடர்பிலும் எந்தவிதமான தகவலும் கிடைக்கப்பெறவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 27 ஆம் திகதி சிறுவர் இல்ல விடுதி முகாமையாளர் சிறுவர் நீதிமன்றால் பணி இடைநிறுத்தப்பட்டிருந்தார். இதனையடுத்து சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்த சிறுவர்கள், இல்ல நிர்வாக கட்டடங்களுக்குச் சேதம் விளைவித்திருந்தனர்.

இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய சிறுவர்கள் என நான்கு பேரது பெயர்களைக் குறிப்பிட்டு கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் சைவ வித்தியா விருத்திச் சங்கத்தின் தலைவரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

அவ்வாறு பெயர் குறிப்பிட்ட நான்கு சிறுவர்களில் இருவரே கடந்த 27 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளனர்.

சிறுவர் இல்லத்தில் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் என்று அடையாளப்படுத்தப்பட்ட 12 சிறுவர்கள், சிறுவர் நீதிமன்றத்தால் சான்று பெற்ற பாடசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....