சமுத்திராதேவி தொடரூந்தின் எஞ்சின், பாதி வழியில் பெட்டிகளை விட்டுச்சென்றது!

Date:

காலியில் இருந்து மருதானை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த சமுத்திராதேவி தொடரூந்தின் பயணிகள் பெட்டிகளை பிரிந்து, அதன் எஞ்சின் மாத்திரம் பயணித்துள்ளது.

இன்று  09 களுத்துறை- வடக்கு பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

களுத்துறை-வடக்கு தொடரூந்து நிலையத்திற்கும், களுத்துறை இலக்கம் 1 தொடரூந்து நிலையத்திற்கும் இடையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தொடரூந்து திணைக்கள அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

தொடரூந்தின் இயந்திரம், தொடரூந்து பெட்டிகளிலிருந்து பிரிந்து சுமார் ஒரு கிலோமீற்றர் தூரம் வரை பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், சுமார் 15 நிமிடங்களின் பின்னர் தொடரூந்து மீண்டும் சீர்செய்யப்பட்டு, மருதானை நோக்கி பயணத்தை ஆரம்பித்ததாக தொடரூந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....