வேடிக்கையான செயற்பாடு சோகமானதாக மாற இடமளியாதீர்கள்

Date:

அண்மைக்காலமாக பல வீதி விபத்துக்களில் பாடசாலை மாணவர்கள் உயிரிழந்துள்ளதாகவும், பெற்றோர்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டுமெனவும் காவல்துறை பேச்சாளர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

காவல்துறை அதிகாரிகளால் வீதியில் செல்லும் ஒவ்வொரு வாகனத்தையும் சோதனை செய்ய முடிவதில்லை.

இதனைக் கருத்திற்கொண்டு, குறிப்பாக பெற்றோர்கள் பாடசாலை மாணவர்களிடம் கவனம் செலுத்த வேண்டும்.

இந்த விடுமுறை காலத்தில் மது அருந்திவிட்டோ மிக வேகமாகவோ வாகனம் செலுத்த வேண்டாம்.

மதுபோதையில் வாகனம் செலுத்தினால் உங்களுக்கும், வீதியில் செல்பவர்களுக்கும், வாகனத்தில் உள்ளவர்களுக்கும் ஆபத்து ஏற்படக்கூடும்.

விபத்து ஏற்பட்டால், உயிர் மற்றும் உடமைகளுக்கு சேதம் ஏற்படலாம். இந்த பண்டிகை காலத்தில் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுங்கள்.

ஆனால் வேடிக்கையானது கடைசியில் சோகமாக மாறக்கூடாது என்பதை நினைவூட்டுகிறேன்.

வீதியில் பயணிக்கும் போது, கவனமாக பயணிக்க வேண்டும். விபத்துகளைத் தவிர்க்க அவதான இருங்கள்” என்றார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....