அயர்லாந்து கிரிக்கெட் அணி இலங்கையில்…

Date:

இரண்டு டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளில் பங்கேற்பதற்காக அயர்லாந்து கிரிக்கெட் அணி இன்று 09 மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாட்டை வந்தடைந்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இதனை அறிவித்துள்ளது.

அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு சுழற்பந்து வீச்சாளர்களான துஷான் ஹேமந்த மற்றும் சதீர சமரவிக்ரம ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர்.

நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கு அழைக்கப்பட்டிருந்த நிரோஷன் டிக்வெல்ல, ஓஷத பெர்னாண்டோ மற்றும் சாமிக்க கருணாரத்ன ஆகியோர் டெஸ்ட் குழாமில் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக அயர்லாந்து அணி இலங்கை வந்துள்ளதுடன் முதல் டெஸ்ட் போட்டி ஏப்ரல் 16ஆம் திகதியும் இரண்டாவது டெஸ்ட் போட்டி ஏப்ரல் 24ஆம் திகதி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

அயர்லாந்து டெஸ்ட் தொடரில், கசுன் ராஜித மற்றும் லஹிரு குமார ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, அதற்கு பதிலாக அசித்த பெர்னாண்டோ, விஷ்வ பெர்னாண்டோ மற்றும் மிலன் ரத்நாயக்க ஆகியோர் டெஸ்ட் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....