இன்றைய ராசிபலன் – 10.04.2023

Date:

மேஷம்:

மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சுபயோக பலன்கள் கிடைக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. திருமண பேச்சு வார்த்தைகள் நன்மை தரும். சுய தொழிலில் உள்ளவர்கள் புதிய நபர்களிடம் முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் பணிச்சுமையை அதிகம் உணர்வீர்கள்.

ரிஷபம்:

ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீண்ட நாள் கனவுகள் நிறைவேற கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. சுய தொழிலில் உள்ளவர்கள் தங்களுடைய தன்னம்பிக்கையை அதிகரித்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய சிந்தனைகள் உதிக்கும் நல்ல நாளாக இருக்கிறது.

மிதுனம்:

மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடையக் கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. எதிர்பாராத நல்ல விஷயங்களை கேட்பீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு நினைத்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் எதிர்மறை எண்ணங்களை தூக்கி எறிவது நல்லது.

கடகம்:

கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புத்துணர்ச்சி மிகுந்த நல்ல நாளாக அமைய இருக்கிறது. புதிய முயற்சிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். சுய தொழிலில் உள்ளவர்கள் சமயோகிதமாக செயல்படுவது உத்தமம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேல் அதிகாரிகளின் தொல்லை அதிகரிக்க வாய்ப்பு உண்டு.

சிம்மம்:

சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கக்கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. குடும்பத்தில் உள்ளவர்களுடன் அனாவசிய வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பெரிய மனிதர்களுடைய ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் சக பணியாளர்களிடம் விட்டுக் கொடுத்து செல்லுங்கள்.

கன்னி:

கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலம் தரக்கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் இருந்து வந்த தடைகள் நீங்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை பெருகும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு உடன் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் பொறுமையை இழக்க வேண்டாம்.

துலாம்:

துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய துணிச்சல் மிகுந்த செயல்கள் மற்றவர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் அமைய இருக்கிறது. முக்கிய முடிவுகளை எடுக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் முன் கோபம் தவிர்க்கவும்.

விருச்சிகம்:

விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய பேச்சுக்கு மற்றவர்கள் மதிப்பு கொடுக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு இதுவரை இருந்து வந்து தடைகள் அகன்று முயற்சிகள் கைகூடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தேவையற்ற நண்பர்களின் சேர்க்கை பிரச்சனையை ஏற்படுத்தும்.

தனுசு:

தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய எண்ணங்கள் அலைபாயுவதற்கு வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் உள்ளவர்களுடன் அனுசரித்து செல்லுங்கள். சுய தொழிலில் உள்ளவர்கள் தேவையற்ற குறுக்கு வழியை கையாள வேண்டாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு.

மகரம்:

மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய மனதில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் இடையூறுகள் ஏற்படலாம். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த இடங்களில் இருந்து பணவரத்து அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம்.

கும்பம்:

கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மன உளைச்சல் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் பிரச்சனைகள் தீரும் வாய்ப்பு உண்டு. சுய தொழிலில் உள்ளவர்கள் கௌரவம் பார்க்காமல் எதிலும் முழுமூச்சோடு செயல்படுங்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்கள் தரத்தை உயர்த்தி கொள்வீர்கள்.

மீனம்:

மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய பொறுமைக்கு ஒரு சவால் நிறைந்த நாளாக இருக்கப் போகிறது. எதையும் ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தித்து செயல்படுங்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரித்து காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நண்பர்களின் உதவிக்கரம் கிடைக்கும்.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....