இத்தாலிக்கு சென்ற அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து விபத்து – 27 பேர் உயிரிழப்பு

Date:

ஆப்பிரிக்க நாடுகளில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு போர் காரணமாக அங்கு கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. எனவே அங்கிருந்து வாழ்வாதாரம் தேடி பலர் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளுக்கு படையெடுக்கின்றனர்.

அவ்வாறு செல்லும்போது பெரும்பாலும் அவர்கள் சட்டவிரோத பயணம் மேற்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதன்படி துனிசியா நாட்டில் இருந்து இத்தாலிக்கு 2 படகுகளில் 50-க்கும் மேற்பட்டோர் புறப்பட்டனர். அப்போது திடீரென அதிக காற்று வீசியதால் அந்த படகுகள் கடலில் கவிழ்ந்தன.

இதுகுறித்து தகவலறிந்த கடலோர காவல் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். எனினும் இந்த விபத்தில் 27 பேர் உயிரிழந்தனர். நீரில் தத்தளித்தப்படி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 17 பேரை மீட்பு குழுவினர் மீட்டனர். இந்த விபத்தில் சிலர் மாயமானதாக கூறப்படுகிறது. அவர்களின் கதி என்ன என்பது தெரியாததால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. எனினும் மாயமானவர்களை தேடும் பணியில் மீட்பு குழுவினர் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....