இன்று உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி எமின் தபரோவா இந்தியா வருகிறார்..!

Date:

உக்ரைன்-ரஷியா போர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன.

இந்த நிலையில், உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி எமின் தபரோவா நான்கு நாள் பயணமாக இன்று (திங்கட்கிழமை) இந்தியா வர உள்ளார். இந்த பயணத்தில், வெளியுறவுத்துறை இணை அமைச்சர் மீனாட்சி லேகி, பாதுகாப்பு துணை ஆலோசகர் விக்ரம் மிஸ்ரி ஆகியோரை சந்திக்க உள்ளார். மேலும் இவர் பிரதமர் மோடியை சந்தித்து உக்ரைனுக்கு வருமாறு அழைப்பு விடுக்க உள்ளதாகவும், உக்ரைனுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கவேண்டும் என கோரிக்கை வைக்கவுள்ளதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த பயணத்தின் மிக முக்கிய நோக்கமாக, “ஜி20 மாநாட்டில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பங்கேற்க, இந்தியா அழைப்பு விடுக்க வேண்டும்” என கோரிக்கை வைக்க உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனுக்கு எதிராக ரஷியா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி இந்திய பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....