நானுஓயா- ராகலை வரையான ஆங்கிலேயர் கால தொடரூந்து பாதையை புனரமைக்க திட்டம்

Date:

நானுஓயாவில் இருந்து நுவரெலியா வழியாக ராகலை வரையான பிரித்தானிய கால தொடரூந்து பாதையை புனரமைக்க போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு வெளிநாட்டு முதலீடுகளை நாடவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

31 கிலோமீற்றர் நீளமுள்ள இந்த குறுகிய தொடரூந்து பாதை, ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்டது.

இருப்பினும், இது வணிக ரீதியாக நம்பகத்தன்மை இல்லாததால், பின்னர் பிரித்தானிய ஆட்சியாளர்களால் பாவனையிலிருந்து நீக்கப்பட்டது.

கட்டமைத்தல், இயக்குதல், இடமாற்றம் மாதிரியின் கீழ் இந்த பாதையை புனரமைக்க வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் இருந்து ஆர்வத்தை வெளிப்படுத்துமாறு அரசாங்கம் அழைப்பு விடுக்கும் என்று அமைச்சர் பந்துல குணவர்தன ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்தார்.

உலகின் ஆறாவது மிக உயரமான தொடரூந்து நிலையமாக கருதப்படும் கந்தபொல தொடரூந்து நிலையம் இந்த தொடரூந்து பாதையில் அமைந்துள்ளது என்றார்.

இந்த தொடரூந்து பாதையை புனரமைப்பதன் ஊடாக சுற்றுலா வளர்ச்சிக்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் கூறினார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....