பொது மக்களிடம் காவல்துறையினர் முன்வைத்துள்ள விசேட கோரிக்கை!

Date:

எதிர்வரும் பண்டிகை நாட்களில் தாங்கள் முன்னெடுக்கப்போகும் நடவடிக்கைகள், சுற்றுலாப் பயணங்கள் பற்றிய விபரங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்வதைத் தவிர்க்குமாறு பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் அண்மைய நாட்களில் திட்டமிடப்பட்ட குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.

ஒரு தனிநபரினால் தமது சமூக வலைத்தளப்பகத்தில் பகிரப்படும் தகவல்களை பயன்படுத்தி, அவர்கள் இல்லாத நேரத்தில், வீடுகளில் கொள்ளையிடும் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

ஒவ்வொருவரும் தமது தனிப்பட்ட பயணங்கள், நடவடிக்கைகள் குறித்த தகவல்களை சமூக வலைத்தளங்களில் பகிர்வதை தவிர்க்குமாறு காவல்துறை ஊடகப் பேச்சாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....