பாகிஸ்தானில் வழிப்பறி, கொள்ளை சம்பவங்கள் அதிகரிப்பு

Date:

பாகிஸ்தானில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு பலர் வறுமையில் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் வழிப்பறி, கொள்ளை போன்ற குற்றச்சம்பவங்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக அங்குள்ள ஒரு டெய்லர் கடையில் துப்பாக்கிமுனையில் மிரட்டி திருட்டு சம்பவம் அரங்கேறி உள்ளது.

குஜ்ரன்வாலா நகரில் உள்ள ஒரு டெய்லர் கடைக்குள் சம்பவத்தன்று மர்ம நபர்கள் வாடிக்கையாளர்கள் போல சென்றுள்ளனர். திடீரென அவர்கள் கடைக்குள் இருந்த தொழிலாளர்களை துப்பாக்கிமுனையில் மிரட்டி தாக்குதலில் ஈடுபட்டனர். மேலும் அங்கிருந்த விலை மதிப்புமிக்க ஆடைகள், செல்போன்கள் உள்ளிட்டவற்றை திருடி விட்டு தப்பி சென்றனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....