யார் பைத்தியம்…! பேயை திருமணம் செய்து கொண்ட பெண் பாடகி விவகாரத்துக்காக காத்து இருக்கிறார்…!

Date:

உலகின் விசித்திரமான திருமணங்களில் ஒன்றை மறப்பது கடினம். இங்கிலாந்து நாட்டில் உள்ள ஆக்ஸ்போர்ட்ஷையர் பகுதியை சேர்ந்தவர் பெண் பாடகி ராக்கர் புரோகார்ட்(38). புரோகார்ட் நீண்ட காலமாக இறந்த விக்டோரியன் காலத்து சிப்பாயான எட்வர்டோ என்ற பேயுடன் டேட்டிங் செய்து கொண்டிருந்தார். இவர் கடந்த ஆண்டு ஹாலோவின் கொண்டாட்டத்தின் போது எட்வர்டோ என்ற ஆண் பேயை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் ஒரு பாழடைந்த ஆலயத்தில் நடைபெற்றது. இந்த ஜோடி பாரி தீவில் தேனிலவை கொண்டாடியது.

அவர்களின் திருமணத்தில் மர்லின் மன்றோ, எல்விஸ் மற்றும் 8வது ஹென்றி கூட கலந்து கொண்டார்கள் என்று புரோகார்ட் முன்பு கூறியிருந்தார்.

தற்போது அந்த பெண் விவாகரத்து கோரியுள்ளார். திருமணத்திற்கு பிறகு ஆவி கணவர் தனது வாழ்க்கையை நரகமாக மாற்றி விட்டதாகவும், பிரிந்து சென்ற பிறகும் கூட தன்னையே பின் தொடர்ந்து வந்து தொல்லை செய்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

குறிப்பாக ஆவி கணவர் ‘அழும் குழந்தையின் அலறலை’ பயன்படுத்தி தனக்கு தொல்லை கொடுப்பதாக கூறியுள்ள பாடகி, ஆவி கணவருடனான உரையாடலுக்கு ஆதாரம் இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் பெரும் சங்கடத்தில் சிக்கி இருப்பதாக கூறிய அவர் தற்போது பேய் ஓட்டுபவர்களின் உதவியை நாடியுள்ளார்.

நான் தோல்வியை ஒப்புக்கொள்ள விரும்பவில்லை, ஆனால் ஒரு பேயை திருமணம் செய்துகொள்வது வேலை செய்யாது என்று உணர்கிறேன்.

முன்பு சுவாரஸ்யமாக இருந்த விஷயங்கள் இப்போது தன்னை பாதிக்கத் தொடங்கியுள்ளன என்று மேலும் அவர் கூறினார். தகவல்தொடர்பு செயல்முறை ஒரு சிறிய பிரச்சினையாக உள்ளது, மேலும் தம்பதியினர் ஒருவருக்கொருவர் உண்மையில் பேச முடியாது. ஒளிரும் மெழுகுவர்த்தி விளக்குகள்வழியாகவே பேச முடியும்

தனது கணவரை சந்திக்கும் முன்பு பேய்கள் போன்றவற்றின் மீது நம்பிக்கை இருந்ததில்லையாம். கணவர் மீது கொண்ட காதலால் திருமணத்தை தக்க வைக்க முயற்சித்ததாகவும், ஆனால் அவரின் நடவடிக்கைகள் தன்னை வேதனைக்கு உள்ளாக்கியதால் தற்போது விவாகரத்து செய்யப்போவதாகவும் கூறியுள்ளார்.

 

 

 

 

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

உலகிலேயே தூய்மையான காற்று இங்கு மட்டுமே கிடைக்கும்!

சுத்தமான காற்று, நல்ல குடிநீர், ஆரோக்கியமான உணவு மற்றும் வசிப்பதற்கு இருப்பிடம்...

இந்தியாவின் ரயில் இயந்திரங்கள் இலங்கைக்கு

சுமார் 20 இயந்திரங்களை இலங்கைக்கு வழங்க இந்தியா இணக்கம் வௌியிட்டுள்ளதாக ரயில்வே...

சாதனை படைத்த நாஸா (NASA)

ஆஸ்டிராய்ட் எனப்படும் சூரியனை சுற்றி வரும் குறுங்கோள்களை ஆராய்ச்சி செய்வதில் அமெரிக்காவின்...

70 இலட்சம் ரூபா பணம் கொள்ளை !

வர்த்தக நிலையமொன்றில் ஆயுதத்தைக்காட்டி அச்சுறுத்தி 7 மில்லியன் ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக...