பெட்டி தேனீ வளர்ப்பில் மாதம் ரூ.40 ஆயிரம் வரை வருமானம் ஈட்டிய தம்பதி

Date:

தேனி மாவட்டம் கம்பம் பகுதியை சேர்ந்தவர்கள் அம்பேத் ராஜா – சந்தியா தம்பதி. இவர்கள் இப்பகுதியில் பெட்டி தேனீக்கள் மூலம் தேன் உற்பத்தி செய்து அதை சந்தைப்படுத்தி ஆண்டொன்றுக்கு லட்சக்கணக்கில் வருமானம் ஈட்டி வருகின்றனர். கடந்த 5 ஆண்டுகளாக பெட்டி தேனீக்கள் மூலம் தேனை உற்பத்தி செய்து வரும் இவர்கள் தேனில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயாரித்து செய்து அதனை விற்று மாத வருமானமாக 40 ஆயிரம் ரூபாய் வரை பெற்று வருகின்றனர்.

கொரோனா கால கட்டத்திற்கு பிறகு தேன் தேவை அதிகரித்து இருப்பதை அறிந்த இவர்கள் பெட்டி தேனீக்களின் மூலம் தேன் உற்பத்தி செய்து அதை தொழிலாகவும் மாற்றியுள்ளனர். ஆரம்பத்தில் கம்பம் மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமப் பகுதி முழுவதும் தங்களுக்கு தெரிந்த இடங்களில் ஆங்காங்கே பெட்டி தேனீக்களை வைத்து தேனை உற்பத்தி செய்து வந்துள்ளனர். கம்பம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மொத்தம் நூற்றுக்கும் மேற்பட்ட பெட்டிகளில் தேனீக்களை வளர்த்து வந்துள்ளனர்.

முருங்கைத் தேன், நெல்லி தேன், செம்பருத்தி தேன், இஞ்சி தேன், மலைத்தேன் என பெட்டி தேனீக்களில் பல வகைகள் உண்டு. தேன் பெட்டிகளை முருங்கை மரம் அதிகமாக இருக்கும் பகுதியில் வைத்தால் அதிலிருந்து தேன் உருவாகும்போது முருங்கையின் மனம் அந்த தேனில் இருப்பதால் முருங்கை தேன் என அழைப்பதுண்டு. இதேபோல் தென்னை, வாழை, செம்பருத்தி என்ன பல பூக்கள் இடத்தில் தேன் பெட்டிகளை வைக்கும்போது அதில் இருந்து உற்பத்தியாகும் தேனின் மனம் மாறுபடும்.

அந்த வகையில் கம்பம் சுற்றுவட்டார பகுதிகளில் தேன் உற்பத்தி செய்து வந்த அம்பேத் ராஜா சந்தியா தம்பதியினர் கேரளப் பகுதியில் ஏலக்காய் தோட்டங்கள் அதிகமாக இருப்பதால் ஏலக்காய் தேன் உற்பத்தி செய்வதற்கு தேன் பெட்டிகளை எடுத்து இடுக்கி மாவட்டம் வண்டன்மேடு பகுதியில் அவற்றை வைத்துள்ளனர். ஏலக்காய் தோட்ட உரிமையாளர்களும் தேனீக்கள் மூலம் மகரந்த சேர்க்கை எளிதாக நடந்து தங்களுக்கு அதிக மகசூல் வேண்டும் என்ற காரணத்தினால் பெட்டிகளை வைக்க ஆர்வம் காட்டுவதாகவும் கூறுகிறார் அம்பேத்ராஜ்.

ஜனதா பெட்டிகள் மற்றும் ISI A வகை பெட்டிகளில் தேனீக்களை வளர்த்து வருவதால் கேரள காலநிலையை பொறுத்தவரை பத்து நாட்களுக்கு ஒரு முறை தேன் எடுக்கலாம் எனவும் தமிழகப் பகுதியாக இருந்தால் 15 நாட்களுக்கு ஒரு முறை தேன் எடுக்கலாம் எனவும் கூறுகிறார். பெட்டியில் சராசரியாக 3 லிட்டர் முதல் ஏழு லிட்டர் வரை தேன் எடுக்க முடியும் எனவும் கூறுகிறார். ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை தேன் எடுப்பதற்கு உகந்த காலம் எனவும் கூறினர்.

இயற்கையாக கிடைக்கும் பெட்டி தேன் தமிழகப் பகுதியை காட்டிலும் கேரள மாநிலத்தில் அதிக விலைக்கு விற்பனை ஆவதாகவும் , ஒரு லிட்டர் 900 ரூபாய் வரை விற்பனை ஆவதாகவும் கூறுகிறார். தேனிலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயார் செய்தும் அதனைசந்தைப் படுத்தியும் வருகின்றனர் இந்த தம்பதிகள். மேலும் தேனீக்கள் வளர்ப்பதற்கு பெட்டிகள், தேன் எடுப்பதற்கான பிரத்தியோக ஆடைகள், பெட்டியுடன் தேனீக்கள் என தேனீக்கள் சம்பந்தப்பட்ட அனைத்துபொருட்களையும் விற்பனை செய்து வருகின்றனர்.

கொரோனா லாக்டவுன் பலரது வாழ்க்கையை புரட்டி போட்டாலும் இந்த தம்பதிக்கு ஏற்றத்தை கொடுத்துள்ளது. அவர்களின் முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்துவிட்டு அவர்களிடமிருந்து விடை பெற்றோம்.

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பல பிரதேச செயலக பிரிவுகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

நாட்டில் நிலவும் கடும் மழையுடனான காலநிலையால், பல பிரதேச செயலக பிரிவுகளுக்கு...

இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் மோதப்போவது யார்?

50 ஓவர் உலகக் கோப்பையில் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற...

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறப்பு

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை...

வெளியில போனவுடனே இந்த பிரச்சனை வருமோ? முதல்முறையாக பயந்த மாயா..!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான பிரதீப் பெண்களுக்கு ஆபத்தானவர் என்ற...