50 இலட்சம் ரூபாய் தொடர்பில் ஐவரிடம் வாக்கு மூலம்

Date:

இலங்கை மத்திய வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்து 50 இலட்சம் ரூபாய் காணாமல்போனமை தொடர்பில், இன்றைய தினமும், 5 வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில், கொழும்பு – கோட்டை காவல்துறை முன்னெடுக்கும் விசாரணைகளுக்கு, குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மத்திய வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்து 50 இலட்சம் ரூபாய் பணக் கட்டு காணாமல் போயுள்ளதாக, கொழும்பு – கோட்டை காவல்துறையில், மத்திய வங்கியின் அதிகாரிகள் சிலர் நேற்று முன்தினம் முறைப்பாடு செய்தனர்.

குறித்த பணக் கட்டை, எவரேனும் திருடினார்களா? அல்லது, கணக்கிடும்போது, அந்தப் பணக் கட்டு அவதானிக்கப்படவில்லையா என்பது குறித்து அவதானம் செலுத்தப்படுவதாக, விசாரணைகளை முன்னெடுக்கும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இலங்கை மத்திய வங்கியும், இந்தச் சம்பவம் குறித்து, உள்ளக விசாரணைகளை முன்னெடுக்கிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....