மீண்டும் ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா

Date:

கொரிய தீபகற்பத்தில் வடகொரியா தொடர் ஏவுகணைகளை அனுப்பி அங்கு போர் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் ஜப்பான் நாட்டின் சிறப்பு பொருளாதார மண்டலத்திலும் வடகொரியா தனது ஏவுகணையை அனுப்பியது.

எனவே தங்களது பாதுகாப்பு கருதி தென்கொரியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து கூட்டுப்போர் பயிற்சியை அண்மையில் நடத்தின. இதற்கு வடகொரியா கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு அணு ஆயுத சோதனை உள்ளிட்டவற்றை முடுக்கியது.

இந்தநிலையில் ஜப்பான் மற்றும் வடகொரியா நாடுகளிடையே உள்ள கடற்பகுதியில் நேற்று அதிகாலை மீண்டும் பாலிஸ்டிக் வகை ஏவுகணைகளை வடகொரியா அனுப்பியது. இதற்கு தென்கொரியா அதிபரின் பாதுகாப்பு கவுன்சில் மற்றும் ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அதில் `வடகொரியாவின் கடல் நடவடிக்கைகளை ஜப்பான் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், இந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை அனுப்பியது தொடர்பாக தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை நடத்த போவதாகவும்’ ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....