துருக்கி- கிரீஸ் எல்லையில் விபத்து : 6 பேர் உயிரிழப்பு

Date:

துருக்கியில் இருந்து கிரீஸ் நாட்டுக்கு 10 அகதிகள் காரில் பயணித்துள்ளனர்.

குறித்த வாகனம் துருக்கி- கிரீஸ் எல்லையில் உள்ள நெடுஞ்சாலையில் சென்ற கொண்டிருந்த போது அங்கு பொலிஸாரை கண்டதையடுத்து அவர்களிடம் இருந்து தப்பிக்க முயன்றுள்ளனர்.

எனவே, பொலிஸாரிடம் இருந்து தப்பிப்பதற்காக தவறான பக்கத்தில் அதாவது சாலையின் மறுபுறமாக சென்றுள்ளனர்.

அப்போது எதிரே வந்த மற்றொரு கார் எதிர்பாராதவிதமாக குறித்த காருடன் மோதியுள்ளது.

இதில் காரில் பயணித்த வாகன சாரதி உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

படுகாயம் அடைந்த சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....