இன்றைய ராசிபலன் 18.04.2023

Date:

மேஷம்

குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். வெளிவட்டாரத்தில் யாரையும் மதிக்க வேண்டாம். உறவினர் நண்பர்களுடன் நெருடல்கள் வந்து நீங்கும். அரசாங்க விஷயம் தாமதமாகும். வியாபாரத்தில் வேலையாட்களுடன் விவாதம் வேண்டாம். உத்தியோகத்தில் மறைமுக தொந்தரவுகள் வந்து நீங்கும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

ரிஷபம்

குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவது நல்லது. மனதிற்கு இதமான செய்தி வரும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை நீங்கள் சந்திக்க நேரிடும். அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.

மிதுனம்

எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை பிறக்கும். பழைய உறவினர் நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் சூட்சமங்களை உணருவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். சாதிக்கும் நாள்.

கடகம்

குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். உறவினர்களால் ஆதாயம் உண்டு. பழைய சிக்கலில் ஒன்று தீரும். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மனநிறைவு கிட்டும் நாள்.

சிம்மம்

சந்திராஷ்டமம் இருப்பதால் சில வேலைகளை உங்கள் பார்வையிலேயே முடிப்பது நல்லது. சிலர் உங்களிடம் நயமாகப் பேசினாலும் சொந்த விஷயங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் பணியாளர்களால் டென்ஷன் ஏற்படும். உத்தியோகத்தில் உங்களை பற்றிய வதந்திகள் வரும். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.

கன்னி

சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். தாயார் ஆதரித்து பேசுவார். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

துலாம்

எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர், நண்பர்களால் பயனடைவீர்கள். சிலர் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வீட்டை விரிவுபடுத்துவீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். நன்மை நடக்கும் நாள்.

விருச்சிகம்

குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டாகும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். புதுமை படைக்கும் நாள்.

தனுசு

நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். புது வேலை கிடைக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். உழைப்பால் உயரும் நாள்.

மகரம்

குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். பூர்வீக சொத்துப் பிரச்னைக்கு சுமுக தீர்வு கிடைக்கும். சொந்த -பந்தங்கள் தேடி வருவார்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.

கும்பம்

கணவன் – மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். வராமல் இருந்த பணம் கைக்கு வரும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். நேர்மறை எண்ணம் பிறக்கும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். புதிய பாதைதெரியும் நாள்.

மீனம்

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். சிலர் உங்களை மட்டம் தட்டிப் பேசினாலும் நீங்கள் உணர்ச்சிவசப்படாதீர்கள். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப்போகும். உத்தியோகத்தில் மற்றவர்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....