228 பயணிகளுடன் கடலில் மோதிய விமானம் : விமானியின் கடைசி மூன்று வார்த்தைகள்

Date:

நடுக்கடலில் 228 பேர்களின் உயிர்களை பறித்த ஏர்பஸ் 330 விமானத்தின் பயங்கர விபத்தின் போது, அதன் விமானி கடைசியாக கூறிய மூன்று வார்த்தைகள் தற்போது தெரியவந்துள்ளது.

கடந்த 2009ம் ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் இருந்து பாரிஸுக்குப் பறந்த ஏர் பிரான்ஸ் ஏர்பஸ் 330 விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இதனால் விமானத்தில் பயணித்த 228 பயணிகளும் துரதிஷ்டவசமாக தங்கள் உயிர்களை பறிகொடுத்தனர். இந்த விபத்திற்கு மார்க் டுபோயிஸ்(58), டேவிட் ராபர்ட் (37), மற்றும் பியர்-செட்ரிக் போனின் (32) ஆகிய விமானிகளின் நடத்தை முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.

இது தொடர்பாக தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், விமானத்தை இயக்க வேண்டிய இருவர் ஒருவர் பின் ஒருவராக தூங்கியது தெரியவந்தது.

இதற்கிடையில் விமானத்தின் வீழ்ச்சி குறித்த சட்ட விசாரணை பல ஆண்டுகளாக நீடித்த நிலையில், இன்று ஏர் பிரான்ஸ் மற்றும் ஏர்பஸ் ஆகியவை மனித படுகொலையில் இருந்து விடுவிக்கப்பட்டன.

மேலும் விமான விபத்துக்கு விமானத்தின் விமானிகள் முழு பொறுப்பாளராக கருதப்பட்டுள்ளனர்.

பதிவு செய்யப்பட்ட காக்பிட் உரையாடல்கள், விமானிகள் மூவரின் திகிலூட்டும் இறுதி உரையாடலையும் வெளிப்படுத்தின.

அதில், நாங்கள் விபத்துக்குள்ளாக போகிறோம்! அது உண்மையல்ல! ஆனால் என்ன நடக்கிறது?” என்று விமானி ராபர்ட் பேசுவது கேட்க முடிகிறது.

பின் விமானிகள் ராபர்ட் அல்லது போனின் இருவரில் ஒருவர் யாரோ நாங்கள் இறந்து விட்டோம் என சேர்க்கிறார்.

இதை தொடர்ந்து நான்கு மணி நேரம் 15 நிமிடங்களில் விமானம் அட்லாண்டிக் கடலில் மோதி விபத்துக்குள்ளானது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....