பயிர்களுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்திய கோட்டாவையே முதலில் ஏற்றுமதிசெய்யவேண்டும்

Date:

ஒரு இலட்சம் குரங்குகள் உயிருடன் இருக்கும்போதே அவற்றின் மூளையை எடுத்து பச்சையாக சாப்பிடுவதற்காக சீனாவுக்கு அனுப்ப அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தங்களால் நடத்தப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர் நயனக ரன்வெல்ல தெரிவித்துள்ளார்.

ஊடக சந்திப்பொன்றில் நேற்று அவர் இதனைத் தெரிவித்தார்.

சீனாவுக்கு குரங்குகளை ஏற்றுமதி செய்யும் விவகாரம் நாட்டின் முக்கிய தலைப்பாக மாறியுள்ளது. இருப்பினும், வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின்படி, அதிக எண்ணிக்கையிலான வன விலங்குகளை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான சட்ட விதிகள் எதுவும் இல்லை.

“இந்தச் சட்டத்தின்படி, வனவிலங்குகளை விற்பனை செய்வதில் ஈடுபடக் கூடாது என்று ஒப்பந்தம் செய்துள்ளதால், பணத்திற்காக நம் நாட்டில் விலங்குகளை ஏற்றுமதி செய்ய முடியாது.

“வனவிலங்குகளை ஏற்றுமதி செய்வது அன்னிய செலாவணியை கொண்டு வர உதவாது. ஆனால், அரச அதிகாரி ஒருவரின் மனைவி திரைமறைவில் இந்த திட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது” என ரன்வெல்ல கூறினார்.

மேலும், குரங்குகள் உயிருடன் இருக்கும்போதே அவற்றின் மூளையை பச்சையாக சாப்பிடும் சிறப்பு உணவு தயாரிக்கும் முறை சீனாவில் நடந்து வருவதாகவும் அவர் கூறினார்.

அமெரிக்காவிலிருந்தும் அதிக அளவில் குரங்குகளுக்கான முன்பதிவு கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த குரங்குகள் மனிதர்களின் உடல் அமைப்பைப் போன்ற அமைப்பைக் கொண்டுள்ளன, எனவே, அவை இறுதி மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ள ஆய்வகங்களில் பயன்படுத்தப்படும்.

குரங்குகளை ஏற்றுமதி செய்ய வேண்டாம் என அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்த ரன்வெல்ல, நாட்டை நாசப்படுத்திய நாடாளுமன்ற உறுப்பினர்களை ஏற்றுமதி செய்ய தீர்மானம் எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

“இந்த குரங்குகளால் பயிர்களில் பெரும் பங்கு அழிந்து வருகிறது. எனினும் அவற்றை ஏற்றுமதி செய்வது அதற்கான தீர்வாகாது. பயிர்களைப் பாதுகாப்பதற்கான தீர்வுகளை நாங்கள் ஏற்கனவே முன்வைத்துள்ளோம், ஆனால் அரசாங்கத்தில் யாரும் அவற்றைக் கேட்கத் தயாராக இல்லை.

பயிர்களுக்கு அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தியோர் பட்டியலில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவே முதலிடம் பெறுவார். எனவே, அவரையே முதலில் ஏற்றுமதி செய்யவேண்டும்” என்று ரன்வெல்ல மேலும் கூறினார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....