எம் எல் ஏக்களுக்கு ஜாக்பாட்..!

Date:

தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் மாதம் 30 ஆம் திகதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நிதியமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்த பட்ஜெட் உரை மீது மானியக் கோரிக்கை விவாதங்களும், அனைத்து துறைகளுக்குமான அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகின்றன. இதில் முன்னாள் எம் ஏல் ஏக்களுக்கான ஓய்வூதியம் மற்றும் மருத்துவ உதவித் தொகை உயர்த்தி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. முதலமைச்சர் முக.ஸ்டாலினின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்ட இந்த கோரிக்கையை தமிழக அரசும் பரிசீலனை செய்தது. இதனால் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கான பென்சன் உயர்வு மற்றும் மருத்துவ உதவித் தொகை உயர்த்தப்பட வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டது.

இந்த கூட்டத்தொடர் முடிவதற்குள்ளாகவே அறிவிப்பு வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் தலைமை செயலக வட்டாரங்களில் பேச்சு அடிபட்டது. இந்நிலையில், இதற்கான அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் புதன்கிழமை அறிவித்தார். அந்த அறிவிப்பில் முன்னாள் எம்எ ல் ஏக்களுக்கான மாத ஓய்வூதியம் ரூ.25 ஆயிரத்தில் இருந்து 30 ஆயிரமாக உயர்த்தப்படும் என்றும் மருத்துவப் படி 50 ஆயிரத்தில் இருந்து 75 ஆயிரமாக உயர்த்தபடும், குடும்ப ஓய்வூதியம் 15 ஆயிரமாக கொடுக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

சட்டப்பேரவையில் இது தொடர்பான அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படிக்கும்போது, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுடைய ஓய்வூதியத்தையும், மருத்துவப் படியையும் உயர்த்த வேண்டுமென உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர். அதன்படி, முன்னாள் சட்டப் பேரவை மற்றும் மேலவை உறுப்பினர்களுக்குத் தற்போது வழங்கப்பட்டு வரக்கூடிய மாத ஓய்வூதியம் ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.30 ஆயிரமாக, கலைஞர் நூற்றாண்டு விழாவைமுன்னிட்டு, ஜூன் மாதம் முதல் உயர்த்தப்படும்.

குடும்ப ஓய்வூதியம் மாதம் ஒன்றுக்கு ரூ.12,500 என்பது, ரூ.15 ஆயிரமாக உயர்த்தப்படும். தற்போது ஆண்டு ஒன்றுக்கு வழங்கப்பட்டு வரும் மருத்துவப் படி ரூ.50 ஆயிரம் என்பது ரூ.75 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்தார்.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....