பிரபல கொரிய பாப் இசை பாடகர் மூன்பின் திடீர் மரணம்

Date:

தென்கொரியாவை சேர்ந்தவர் பிரபல பாப் இசை பாடகர் மூன்பின். ஆரம்பத்தில் மாடல், நடிகராக இருந்த மூன்பின் பின்னர் தென்கொரியாவின் அஸ்ட்ரோ இசைக் குழுவின் உறுப்பினராகவும் இருந்தார். அதனைத் தொடர்ந்து சமீப ஆண்டுகளாக மூன்பின் ‘சன்ஹா’ இசைக் குழுவில் இருந்து வந்தார். 25 வயதான மூன்பின் தென்கொரிய தலைநகர் சியோலில் உள்ள அவரது அடுக்குமாடி குடியிருப்பில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். மூன்பின்னின் மரணம் தென்கொரிய பாப் உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 2016 இல் எஸ்ட்ரோ இசைக்குழுவில் இணைந்துக் கொண்ட இவர் நடிகராகவும் மாடலாகவும் பணியாற்றியுள்ளார்.

மூன்பின் தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தென்கொரிய பாப் நட்சத்திரங்களின் மரணங்கள் கடந்த சில ஆண்டுகளாகவே அதிகரித்து வருகின்றன. பிரபல பாடகர்கள் சுல்லி, கோ ஹாரா, ஜோ யுன் ஆகியோர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், தற்போது மூன்பின் மரணம் ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூன்பின் மரணத்துக்கு பல்வேறு இடங்களில் ரசிகர்கள் தங்களது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....