தகாத படங்கள்.. இணையத்தில் பாலியல் துன்புறுத்தல்…. நடிகை ஐஸ்வர்யா

Date:

நடிகை ஐஸ்வர்யா பாஸ்கரன் சமீபத்தில் தனது யூடியூப் சேனலில் சமூக வலைதளங்களில் இருந்து தனக்கு வந்த மோசமான செய்தி மற்றும் படங்கள் குறித்து பகிர்ந்துக் கொண்டார்.

அந்த படங்கள் மற்றும் செய்திகள் தனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதாக ஐஸ்வர்யா, தான் இன்னும் கவர்ச்சியாக இருப்பதாகவும், தன்னைப் பற்றி தகாத படங்களை அனுப்பியதாகவும் நெட்டிசன்கள் மீது குற்றம் சாட்டினார்.

ஒரு நபர் தனக்கு நடுஇரவில் செய்தி அனுப்பி, சோப்புகளை தனிப்பட்ட முறையில் பார்ப்பதற்காக அவரது வீட்டிற்கு அழைத்ததையும் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யா. தொழில் முனைவோராக சோப்புகளை தயார் செய்து விற்பனை செய்து வரும் அவர், தான் சோப்புகளை தான் விற்கிறேன், தன்னை அல்ல என்று கூறினார்.

தவிர, ஐஸ்வர்யா தனது யூடியூப் சேனலில் வீகன் உணவு வகைகள், சோப்பு தயாரித்தல் மற்றும் ஆன்மீகம் பற்றி பதிவிடுகிறார். கோப்பு விற்பனை செய்து வரும் அவர், அதை விளம்பரப்படுத்த தனது சமூக ஊடக தளத்தைப் பயன்படுத்துகிறார். தற்போது நடிப்பு வாய்ப்புகள் இல்லாததால் சோப்பு வியாபாரம் தான் முதன்மை வருமானமாக மாறியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

பழம்பெரும் நடிகை லட்சுமியின் மகளான ஐஸ்வர்யா தற்போது தனியே வசித்து வருகிறார். இதையடுத்து பல ஆண்கள் அவருக்கு சமூக ஊடகங்களில் பாலியல் துன்புறுத்தல் செய்திகளை அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....